தமிழகம்

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து: பெண் பலத்த தீ காயம்

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் 80 சதவிகித தீ காயம் அடைந்தார்.

சூலக்கரை சத்திய சாய் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. சென்னையில் சினிமா துறையில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி (33). இவர்களுக்கு பார்கவி (11) என்ற மகள் உண்டு.
இன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சித்ராதேவி சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சித்ராதேவி பலத்த தீக்காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சித்ராதேவியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவிகிதம் தீக்காயமடைந்த சித்ராதேவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT