தமிழகம்

டார்னியர் விமான விபத்தின் விசாரணை அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

டார்னியர் விமான விபத்து குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை கடலோர காவல்படையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான டார்னியர் சிஜி-791 போர் விமானம் கடந்த ஜூன் 8-ம் தேதி கடலூர் மாவட்ட கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூன்று விமானிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரு மாதத்துக்கும் மேல் நீண்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டன. அத் துடன், மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. தமிழ்நாடு தடயவியல் மையத்தில் நடத் தப்பட்ட பரிசோதனையில் அவை விமானத்தில் பயணம் செய்த விமானிகளுடையது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த விமானிகள் வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ் மற்றும் எம்.கே.சோனி உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கருப்புப் பெட்டி மீட்பு

விமானத்தின் கருப்புப் பெட்டி சேதம் அடைந்ததால் அதிலிருந்து தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கருப்புப் பெட்டி, அதைத் தயாரித்த அமெரிக்க நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட் டது. இக்குழு தனது விசாரணை அறிக்கையை கடலோர காவல் படையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை கடலோர காவல்படை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். அதன் பிறகே விமான விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து தெரிய வரும் என கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT