ஆஸ்துமா நோயால் ஆயிரம் பெண்களில், 17 பெண்கள் பாதிக்கப் படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
உலக ஆஸ்துமா தினம் மே 6-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா, ஆஸ்துமா குறித்த விழிப் புணர்வு பிரச்சாரத்தை செய்ய வுள்ளது. இதுதொடர்பாக சிப்லா நிறுவனத்தின் சார்பில் குழந்தை கள் நலம் மற்றும் நுரையீரல் டாக்டர் பாலசந்திரன், டாக்டர் பிரசன்னகுமார் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆஸ்துமா நோயை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். முறையான சிகிச்சை பெற்றால், ஆஸ்துமாவை பூரணமாக குணப் படுத்தி விடலாம். அதற் கான அனைத்து மருந்துகளும் உள்ளது.
நாட்டில் உள்ள 30 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகளில், பெரும் பாலானோரிடம் நோய் குறித்தபோது மான விழிப்புணர்வு இல்லை. 1,000 பெண் களில், 17 பெண்கள் ஆஸ்துமா பிரச்சினையால் பாதிக்கப்பட் டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள்தான் அதிக அளவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படு கின்றனர். ஆனால் வளர்ந்த பிறகு ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின் றனர்.
பெற்றோருக்கு ஆஸ்துமா இருந்தால் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு 50 சதவீதம் வாய்ப்புள்ளது.
சுவாசிப்பதில் பிரச்சினை, சளி, இருமல் போன்றவை ஆஸ்துமா வின் பொதுவான அறிகுறிகளா கும். அதனால், ஆஸ்துமா அறிகுறி கள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.
பேட்டியின் போது சிப்லா நிறு வனத்தின் விற்பனை மேலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.