தமிழகம்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

செய்திப்பிரிவு

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனி சாமிதான் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் அருகே ம.மூ.கோவிலூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் முதல்வர் வேட் பாளர் யார் என்ற போட்டியெல்லாம் இல்லை. நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம். சின்னப் பிரச்சினைகள் இருக்கும், அதையெல்லாம் பார்த்துக் கொள்வோம். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். அடுத்த முதல்வர் பழனிசாமி தான். அக்டோபர் 7-ம் தேதி முறைப்படி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள். முதல்வர் நடத்திய கூட்டத் தில் துணை முதல்வர் பங் கேற்காதது, அவரது வேலை யின் காரணமாகவே. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT