தமிழகம்

கண்மாய், வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிடம்: பிஆர்பி ஏற்றுமதி தொழிற்சாலையில் சகாயம் ஆய்வு

செய்திப்பிரிவு

பிஆர்பி கிரானைட் ஏற்றுமதி தொழிற்சாலையை முதல்முறை யாக சட்ட ஆணையர் சகாயம் ஆய்வு செய்தார். அப்போது ஆலையின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கண்மாய், வாய்க் கால்களை மீட்காதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப் பினார்.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை விசா ரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம், கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்த மான தெற்குத்தெருவில் உள்ள பிஆர்பி ஏற்றுமதி நிறுவன தொழிற்சாலைக்குள் நேற்று ஆய்வுக்குச் சென்றார். கிரானைட் பாலீஷ் தொழிற்சாலை உட்பட 300 ஏக்கரில் உள்ள தொழிற்கூட வளாகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்த கண்காட்சிக்கூடத்தில் கிரானைட் கற்களால் உருவாக்கப் பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள தாஜ்மஹால் மற்றும் ஜல்லிக்கட்டு காளை, சிங்கம் போன்றவற்றை சகாயம் ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப் பணித்துறையினர் சகாயத்திடம் கூறும்போது, பெரியாறு 10-வது பிரதான கால்வாயின் 17-வது வாய்க்காலில் பிஆர்பி நிறுவனம் 710 மீட்டர் நீளத்துக்கு அனுமதி யில்லாமல் அடைத்து, வேறு திசையில் திருப்பிவிட்டுள்ளனர். 1.20 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கட்டிடம் கட்டியுள்ளனர். இரு கண்மாய் பாசனத்தில் உள்ள 90 சதவீத நிலங்களை பிஆர்பி நிறுவனமே வாங்கி, தொழிற்சாலை கட்டிவிட்டது. இதனால் கடம்பன் குளம், மடைவெட்டி கண்மாய்களுக் குத் தண்ணீர் செல்வது தடைபட்டுப் போனது என்றனர்.

கண்மாயை சுற்றி தொழிற்சாலை

தொழிற்சாலைக்குள் கண்மாய் இருந்ததை ஆய்வு செய்த சகாயத் திடம் சிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயவீரணன், ரவிச்சந்திரன் கூறும்போது, ‘அய்யனார் கோயில், அய்யம்பத்திகுளம், பெரிய உசிலை குளம் உட்பட 3 குளங்களைச் சுற்றி வளைத்து பெரும்பகுதியில் ஆலையை கட்டியுள்ளனர். கோயில் திருவிழாவை 15 ஆண்டுகளாக கொண்டாட முடியவில்லை. கழிவு நீரை கண்மாய்க்குள் விடுவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது’ என் றனர். வருவாய்த் துறை ஆவணங் களின்படி ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்ததை சகாயம் கண்டறிந் தார். சோமசுந்தரம் என்கிற விவசாயி சகாயத்திடம் கூறும்போது, ஏழை, எளிய மக்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை பிஆர்பி நிறுவனம் ஆக்கிமித்துள்ளது’ எனக் கூறி மனு ஒன்றையும் அளித்தார்.

சகாயம் சரமாரி கேள்வி

ஆய்வுக்கு வந்த பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சகாயம் பேசும் போது, ‘உணவு உற்பத்திக்கு வழிவகுக்கும் நஞ்சை நிலத்தில் பெரும்பகுதியில் தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. நிலத்தின் வகைப்பாட்டை ஆட்சியர்தான் நேரில் ஆய்வு செய்து மாற்றித் தர முடியும். இந்த அனுமதியை பிஆர்பி நிறுவனம் பெற்றுள்ளதா? பல லட்சம் சதுரஅடியில் தொழிற்சாலை பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளதற்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதி பெறப் பட்டுள்ளதா?

கண்மாயின் பாசன நிலத்தை முழுமையாக வாங்கினா லும், கண்மாயை சுற்றி வளைக் கவோ, தண்ணீர் செல்வதை மறைக்கவோ யார் அதிகாரம் அளித்தது? தொழிற்சாலைக்குள் கண்மாய்கள், புறம்போக்கு உள் ளிட்ட அரசு நிலங்கள் இருப்பது தெரிந்தும் இதை மீட்க பொதுப் பணித்துறை, வருவாய்த் துறையி னர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கிரானைட் கழிவு நீர் கண் மாய்க்குள் விடப்படுவதை ஏன் தடுக்கவில்லை என பல கேள்வி களை சகாயம் கேட்டார். எந்தக் கேள்விக்கும் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.

இதற்கு முன்னதாக கழுகுமலை யில் சமணர் படுகைகளுக்கு அருகே விதிகளை மீறி செயல்பட்ட திருச்சி வினோத், ராமஜெயத்தால் நடத்தப்பட்ட குவாரியையும் சகாயம் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT