முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக தலைமைக்கழகம் 4 சுவர்களுக்குள் முடிவெடுக்கும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்வது என்பது சகஜமானது. ஒரு அமைச்சர் வீட்டில், அதிலும் மூத்த அமைச்சர் வீட்டில், அதைவிட முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டங்களில் மற்ற அமைச்சர்கள் கலந்துகொள்வது வழக்கமானதுதான்.
தற்போது அதிமுக இரட்டை தலைமையுடன் செயல்படுகிறது. இனிவரும் காலங்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தலைமைக் கழகம் 4 சுவர்களுக்குள் முடிவெடுக்கும். மற்றவர்கள் நினைப்பதுபோல அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை என்றார்.