மாணவர்களும் இளைஞர்களும் புதிய அரசியல் மாற்றத்தை உரு வாக்க முன்வர வேண்டும் என திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு பொதுக் கூட்டம் புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநில தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் டாக்டர் சிவதாசன், துணைத் தலைவர் கனகராஜ் முன் னிலை வகித்தனர். இதில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்டு பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி இந்தியாவை நீண்ட நாட்கள் ஆட்சி செய்தது. தேர்தல் நேரத்தில் ஏழைகளுக்கு நல்லது செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்து பின்னர் பெரு வணிக நிறுவனங்களுக்கு ஆதர வாக செயல்பட்டது. அதேபோல் தற்போது உள்ள பாஜகவும் கடந்த தேர்தலின்போது ஏழை, எளியோரை மேம்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த னர். ஆனால் தற்போது பெரு முத லாளிகளுக்கு ஆதரவாக செயல் படுகின்றனர். வகுப்புவாதக் கொள் கைகளை பரப்புவதால் பாஜக ஆபத்தான கட்சியாகும். பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழி லாளர்கள், உழைக்கும் வர்க்கத்தி னர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வியை வணிகமயமாக்கி, வகுப்புவாத கொள்கைகளை புகுத்த முற் பட்டுள்ளனர்.
நாட்டை காப்பாற்றும் வகை யில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியமான ஒன்று. இளைஞர்கள், மாணவர்கள் புதிய அரசியல் மாற்றை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.