தமிழகம்

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி தொடர்பாக பாஜக ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,687 பேர்முறைகேடாக இணைக்கப்பட்டு ரூ.80.60 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வஜ்ஜிரவேலு வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார். வேளாண் அதிகாரிகள், கணினி மைய உரிமையாளர் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றிய நிர்வாகி கண்மணி, கணினி மைய உரிமையாளர் ஜெகநாதன் ஆகியோரை நேற்று கைது செய்ததாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT