தமிழகம்

அண்ணா பல்கலை பெயரை மாற்ற வேண்டாம்: பாலகுருசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வருக்கு அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி அனுப்பியுள்ள மனு:

அண்ணா பல்கலைக்கு மத்திய அரசு சிறப்புநிலை கல்வி நிறுவனம் (Institute of Eminence-IoE) என்ற சிறப்பை அளித்தது மகிழ்ச்சி. நாட்டில் இத்தகைய உயரிய சிறப்பை பெற்ற 2 அரசு பல்கலைகளில் அண்ணா பல்கலையும் இடம்பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் அண்ணா பல்கலையை உலகின் சிறந்த கல்வி நிறுவனமாக உருவாக்கும்.

அதேநேரம், அண்ணா பல்கலையின் பெயரை மாற்ற வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன். அவ்வாறு மாற்றுவதால், தாய்ப் பல்கலையான அண்ணா பல்கலை தனது பெயரை இழக்கும். இணைப்பு பொறியியல் கல்லூரிகளை புதிதாக உருவாக்கப்பட உள்ள பல்கலையுடன் இணைத்து, எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் சூட்டலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT