கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், முதியோரின் உடல் நலம், மன நலம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் ‘முதுமை எனும் பூங்காற்று’ முதியோர் நலன் காக்கும் மாத இதழ் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘முதியோரின் நிலை – நேற்று இன்று நாளை’ எனும் இணையவழி கருத்தரங்கம் நாளை (அக்.1) மாலை 5 முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழின் சிறப்பாசிரியரும் மூத்த முதியோர் நல மருத்துவருமான பத்ம வ.செ.நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். முதியோர்நலன் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார்.
இக் கருத்தரங்கை துளசி பார்மஸிஸ், ஆஸியானா ஆகியவை இணைந்து வழங்குகின்றன. இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/event/40-muthiyorin-nilai-netru-indru-naalai.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.