கொடைக்கானல், ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, கே.சம்பத், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஷீலாராணி சுங்கத், ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட் டோர் கொண்ட இரு குழுக்களை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் யானை கே.ராஜேந்திரன், கொடைக் கானல் சுற்றுச்சூழல் இளைஞர் சேவை அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த பொது நல மனு வில், “நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன் னூர் ஆகிய பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. இதுபோல கொடைக்கானலிலும் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று மற்றொரு மனுவில் கோரப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு ஏற்கனவே விசா ரணைக்கு வந்தபோது கொடைக் கானல் மற்றும் ஊட்டியில் அனு மதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு போதாது. எனவே, இரண்டு பகுதிகளுக்கும் இரண்டு குழுக்கள் அமைக்க வேண்டியது அவசியம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது இரு குழுக்களை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் விவரம்:-
ஊட்டிக்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஷீலாராணி சுங்கத் ஆகியோரும், கொடைக் கானலுக்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த குழுக்களின் தொடக்க கூட்டத்தில், குழுவின் வரம்பு, எவ்வாறு செயல்பட வேண்டும், அதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை நிர்ணயித்து தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் அதில் எங்களது ஆலோசனை யைக் கூறுவோம். குழுக் கூட்டம் நடைபெற அனைத்து வசதிகளை யும் தமிழக அரசு செய்து தர வேண் டும். முன்னதாக தங்களுக்கு தேவையானவற்றை அரசுக்கு குழுக்கள் தெரிவிக்க வேண்டும். இதில், ஏதாவது சிரமம் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்.
இக்குழுக்களின் முதல்கட்ட அறிக்கையை அடுத்தகட்ட விசா ரணையின் மூன்று நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங் கல் துறையின் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், விதிமீறி கட்டப் பட்ட கட்டிடங்கள் தொடர்பாக வந்த மனுக்களை, மாதத்துக்கு 50 வீதம் விசாரித்து முடித்துவைத்ததாக தெரிவித்துள்ளார். இதன்படி பார்த் தால், வரப்பெற்றுள்ள மனுக் களை விசாரித்து முடிக்க மூன்று ஆண்டுகள் வரை ஆகும். எனவே, இப்பணியைச் செய்துமுடிக்க குறைந்தபட்சம் இருவர் தேவைப் படுவது குறித்து வரும் 22-ம் தேதி முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.