ஓசூர் அருகே கெலமங்கலத்தில் நிதி நிறுவன அதிபரை மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள் ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் சுல்தான்பேட்டையைச் சேர்ந் தவர் மாதையன் (60). இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். மேலும், ஏலச்சீட்டு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி தனலட்சுமி (54). இவர்களுக்கு சுகன்யா (27), சுகந்தா (24) என்ற 2 மகள் களும், அஜய் (எ) சேசுராஜன் (22) என்ற மகனும் உள்ளனர். மாதையனின் வீடும், கடையும் அருகருகே உள்ளது. வீடு மற்றும் துணிக்கடையின் வெளிப்புறத்தில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாதையன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டின் தரைத்தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தினர் வீட்டின் மாடி அறையில் தூங்கினர். நேற்று காலை 6 மணி அளவில் தனலட்சுமி தரைதளத்துக்கு வந்தார்.
அப்போது மாதையன் கட்டி லில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். வீட்டின் வாசல் கதவு திறந்து இருந்தது. வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி (கண்காணிப்பு) கேமராக்கள் அனைத்தும் துணியால் கட்டி மறைக்கப்பட்டிருந்தன. வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் பணம், 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக் கப்பட்டிருந்தன.
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம் மாள், ஓசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷினி, ஏடிஎஸ்பி ஆறுமுகச்சாமி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி வெங்கடாசலம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
மாதையன் ஏலச்சீட்டும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததால், அவரிடம் பணப்புழக்கம் எப்போதும் இருக்கும் என்பதை அறிந்த மர்ம நபர்கள் திட்ட மிட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீ ஸார் சந்தேகிக்கின்றனர்.