தமிழகம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே குந்தலபட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

அப்போது மருந்து கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மருந்து கலக்கும் அறை முற்றிலும் வெடித்துச் சிதறியது.‌

தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர் தீயையை அணைத்து வேறு அறைகளுக்கு தீ பரவவிடாமல் தடுத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT