காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் திமுக மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற குப்பை அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டோர். 
தமிழகம்

காரைக்கால் அருகே திமுக சார்பில் குப்பை அள்ளும் போராட்டம்

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் திமுக மருத்துவர் அணி சார்பில் குப்பை அள்ளும் போராட்டம் இன்று நடைபெற்றது.

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நெடுங்காடு பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காட்சியளிப்பதோடு, கரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்தும், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி மக்கள் பணியைச் செய்ய விடாமல் முடக்கும் புதுச்சேரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் குப்பை அள்ளும் போராட்டம் இன்று (செப். 27) திமுக மருத்துவர் அணி சார்பில் நடத்தப்பட்டது.

காரைக்கால் திமுக மருத்துவரணி அமைப்பாளர் வி.விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சதாசிவம், தொ.மு.ச மாநில செயலாளர் ஆராமுதன், தொண்டரணி துணை அமைப்பாளர் மோகன் உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT