முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பிரசித்தி பெற்ற மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு இன் னும் மழை நீர் வரவில்லை.
மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கூட லழகர் பெருமாள் கோயில் உரு வான காலத்திலிருந்தே இத் தெப் பக்குளம் உள்ளது.
1960-ம் ஆண்டு வரை இந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடந்தது. அதன்பின் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைகளைக் கட்டி வாட கைக்கு விட்டதால் தெப்பத்துக்கு மழை நீர் வருவது தடைப்பட்டது.
காலப்போக்கில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் நகர் பகுதியில் ஆங்காங்கே ஆக் கிரமிக்கப்பட்டது.
அதனால், தெப்பக்குளம் தண் ணீரில்லாமல் கடந்த 60 ஆண் டுகளாக வறண்டு முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. தற்போது தெப்பக்குளத்தைச் சுற்றிலும் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, தெப்பத்துக்கு நிரந்தரமாக நீர் வருவதற்கு இந்துசமய அற நிலையத் துறை நிர்வாகம் நட வடிக்கை எடுத்தது. ஆனால், இப்பணி பாதியில் நிற்பதால், தெப்பக்குளத்தை மீட்கும் முயற்சி தடைப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்கு முன்பே மாநகராட்சி நிர் வாகம், தெப்பக்குளத்துக்கு பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் தேங்கும் மழைநீரைக் கொண்டுவர முயற்சி எடுத்தது. ஆனால், மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது இந்த தெப்பக்குளம் வறண்டு காணப்படுவதால் இந்த ஆண்டும் வழக்கம்போல் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நிலை தெப்பமாகக்தான் நடக்குமோ என பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.