கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும்அணுசக்தி துறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் சேகர்பாசு, கரோனாபாதிப்பால் கொல்கத்தாவில் நேற்று காலமானார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தி துறைஆணையத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் சேகர்பாசு. மேலும், இவர் அணுசக்தி துறையின் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். கொல்கத்தாவில்வசித்து வந்த சேகர்பாசு, கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
‘அணுசக்தி துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த சேகர்பாசுவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது' என இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இரங்கல் தெரிவித்துள்ளது. அணுசக்தி துறையின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சேகர்பாசு பணியாற்றியுள்ளார். கரோனாவால் அவர் உயிரிழந்ததால், அவரது மனைவியும் மகனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.