தமிழகம்

சிண்டிகேட் வங்கி கடந்த காலாண்டில் விவசாயத்துக்கு ரூ.25,713 கோடி கடன் வழங்கியுள்ளது

செய்திப்பிரிவு

சிண்டிகேட் வங்கி கடந்த காலாண்டில் ரூ.25713.31 கோடி விவசாயக் கடன் வழங்கியுள்ளது. இது முந்தையை காலாண்டை விட 16.75 சதவீத வளர்ச்சியாகும்.

சிண்டிகேட் வங்கியின் செயல் இயக்குநர் டி.கே.ஸ்ரீவஸ்தவா, சென்னை மண்டல கள பொது மேலாளர் டி.ரவீந்திரநாத் ஆகி யோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

சிண்டிகேட் வங்கி 1925-ம் ஆண் டில் தொடங்கப்பட்டு தற்போது ரூ.4,72,422 கோடி விற்றுமுதலு டனும், 3559 கிளைகளுடன் மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டிலேயே முதல் அனைத்து மகளிர் கிளை தொடங்கியது, விவசாய கடன் மற்றும் ஊரக கடன் வழங்கியது, பொதுத் துறை வங்கிகளில் கோர் பாங்கிங் வசதியை ஏற்படுத்தியது எல்லாமே சிண்டிகேட் வங்கிதான்.

சர்வதேச அளவிலும், நமது நாட்டிலும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவிய சமயத்திலும் வங்கி 21 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த காலாண்டில் விவசாய கடனாக ரூ.25713.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய காலாண்டில் 22024.91 கோடியாக இருந்தது. அதேபோல குறு சிறு தொழில்களுக்காக ரூ.21439.13 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது 21.53 சதவீதம் அதிகமாகும்.

தமிழகத்தில் 254 கிளைகளுடன் சிண்டிகேட் வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலத்தில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. தமி ழகத்தில் ரூ.25,666 கோடி அளவுக்கு வணிகம் நடக்கிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக் காகவும் கடன் வழங்குவதில் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மொத்தம் 89 கிளைகள் உள்ளன. இந்த மண்டலத்தில் ரூ.14,571 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. கடந்த ஜூன் வரையிலான காலகட்டத்தில் முன்னுரிமை பிரிவுகளுக்கு ரூ.1643 கோடியும், குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு ரூ.1334 கோடியும், விவசாயத்துக்கு ரூ.102 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT