திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முக்கியத் துவம் வாய்ந்த ஆவணி திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை 1 மணிக்கு திருக் கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த் தாண்ட தீபாராதனை நடைபெற் றன.
அதிகாலை 4 மணிக்கு கொடிப் பட்டம் வெள்ளிப் பல்லக்கில் வைத்து 9 சன்னிதிகள் வழியாகக் கொண்டுவரப்பட்டது. அதிகாலை 5.15 மணிக்குக் கோயில் பிரகாரத் தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் கொடியை மு.பரத் பட்டர் ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகை அபிஷேகங்களும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை சுப்பிரமணி யன் தம்பிரான் சுவாமிகள், திருக் கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் கோபால், கோயில் உள்துறை கண்காணிப்பா ளர் சுப்பிரமணியன், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத் தப்பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 12-ம் தேதி வரை நடை பெறவுள்ள இந்த ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற வுள்ளது.