மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் வேலுார் இப்ராகிம் நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார் கோயிலுக்கு சென்று தலவரலாறைக் கேட்டறிந்தார். 
தமிழகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்

செய்திப்பிரிவு

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் வேலுார் இப்ராகிம், பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நாமகிரித் தாயார், நரசிம்மர் சன்னதிக்குச் சென்று தலவரலாறுகளை கேட்டறிந்தார்.

மத்திய அரசின் சாதனை திட்டங்களை விளக்க பாஜக ஆதரவு அமைப்பான ஏகத்துவ ஜமாத்தின் மாநிலத் தலைவர் இப்ராஹிம் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன் குமரியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நேற்று முன்தினம் நாமக்கல்லில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அவர் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நாமகிரித் தாயார், நரசிம்மர் சன்னதிக்கு சென்றார்.

அப்போது கோயில் மற்றும் சுவாமி சிறப்புகள் குறித்து பட்டாச்சாரியர்கள் விளக்கிக் கூறினார். அவற்றைக் கேட்ட இப்ராகிம், கந்தசஷ்டி கவசப் பாடல் சர்ச்சையின்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததாக கூறினார். தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரத்தை முடித்த இப்ராகிம், சேலம், திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்றார். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்களிடையே மத்திய அரசின் சாதனை திட்டங்கள் குறித்து பேசினார். தருமபுரியில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

SCROLL FOR NEXT