தமிழகம்

ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில் வரியை ஓராண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

ஊரடங்கை கருத்தில் கொண்டுகடைகளுக்கான சொத்து வரிமற்றும் தொழில் வரியை ஓராண்டுக்கு தள்ளுபடி செய்யவேண்டும் என்று வணிகர் சங்கபேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென் சென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு கடைகளுக்கான மாநகராட்சி சொத்து வரி, தொழில் வரியை ஓராண்டு காலத்துக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். மாநகராட்சி சுகாதார சட்டத் திருத்தம்வணிகர்களுக்கு எதிரான ஒருகருவியாக பயன்படுத்தப்படுகிறது. அதை அரசு முறைப்படுத்த வேண்டும். சுகாதார சட்ட விதிகளின் கீழ் கடைகளை மூடுவதை தடுக்க வேண்டும்.

செப்டம்பர் 28-ம் தேதியே கோயம்பேட்டில் காய்கறி சந்தையோடு சில்லறை மொத்த வியாபார கடைகள், பழக்கடைகள், மலர்கடைகளையும் திறக்க வேண்டும்.வணிக உரிமம் புதுப்பித்தலை மார்ச் 2021 வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பேரமைப்பின் தென்சென்னை வடக்கு மாவட்டதலைவர் ஒய்.எட்வர்டு, சென்னை மண்டலத் தலைவர்கே.ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT