சென்னையில் 12 லட்சம் பேருக்கும் மேல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் கரோனா தொற்றுஅதிகரித்த நிலையில் அதை கட்டுப்படுத்த காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிக அளவில் நடத்தினோம். தினமும் சராசரியாக எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறதோ, அதைவிட 10 மடங்கு அதிகமாக பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தினோம்.
இதுவரை பரிசோதனை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது. செப். 20-ம் தேதி நிலவரப்படி 12 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் செப்.20-ம் தேதி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 9 லட்சத்து 37 ஆயிரத்து 677 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் வேறு எந்த மாநகராட்சியிலும் இவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படவில்லை. தமிழக அளவில் 66 லட்சத்து 40 ஆயிரத்து 58 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 18.34 சதவீதம் சென்னையில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 92 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 6 சதவீதம் பேர் மட்டுமேசிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.