கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 49 ஆர்பிஎஃப் வீரர்கள் நேற்று பணிக்குத் திரும்பினர். அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில், ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பிரேந்திரகுமார், டிஐஜி அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 38 ஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம்: ஆர்பிஎஃப் ஐஜி பிரேந்திரகுமார் தகவல்

செய்திப்பிரிவு

கரோனாவால் பாதிக்கப்பட்டோ ருக்கு சிகிச்சை அளிக்க தொற்றில் இருந்து குணமடைந்த 38 ஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம்செய்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பிரேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 49 ஆர்பிஎஃப் வீரர்கள் குணமடைந்து நேற்று பணிக்குத் திரும்பினர். அவர்களை வரவேற்கும் நிகழ்வு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜிபிரேந்திரகுமார், டிஐஜி அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், ஐஜி பிரேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரயில்வே பாதுகாப்புப் படையில் இதுவரை 128 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில், 110 வீரர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும் உயிழந்துள்ளார். அதுபோல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இதுவரை 38 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்”என்றார்.

பயணிகள் ரயில் சேவை எப்போது?

பின்னர், ரயில்வே பாதுகாப்புப் படை டிஐஜி அருள்ஜோதி கூறும்போது, ‘‘சென்னையில் ரயில் சேவை தொடங்கப்பட்டால் அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கெனவே ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. பயணிகள் ரயில்சேவை தொடங்குவது குறித்து ரயில்வே துறை அறிவிக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT