அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் 600 கிலோ எடையுள்ள மணி நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தடைந்தது. இதை ஏராளமான மக்கள் கண்டு வணங்கினர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலில் அமைய உள்ள மணி தமிழகத்தில் தயாராகி உள்ளது. 5 அடி உயரத்தில் 613 கிலோ எடையில் இந்த மணி தயாராகி உள்ளது. இந்த மணி ராமேஸ்வரத்தில் பூஜை செய்து எடுத்து வரப்பட்டுள்ளது. இது 10 மாநிலங்களை கடந்து 21 நாட்களில் அயோத்தி சென்றடைய உள்ளது. இந்த மணி நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே வந்தடைந்தது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக வந்து அதை தரிசனம் செய்தனர்.