கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகிறார்.
முன்னதாக, நேற்று மாலை முதல்வர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். இரவு மதுரையில் தங்கிய அவர், இன்று காலை 7 மணிக்கு காரில் ராமநாதபுரம் செல்கிறார். பின்னர், காலை 9.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அங்குள்ள விழா மேடையில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி, வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.
பின்னர், மதிய உணவுக்குப் பிறகு, கார் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்து அங்கிருந்து விமானம் மூலம் மாலை 4 மணிக்கு சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.