தமிழகம்

சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, பாஜக மோதல்: 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயம்

செய்திப்பிரிவு

சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, பாஜக இடையே ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

பிரதமர் மோடி பிறந்தநாளைமுன்னிட்டு சென்னை நங்கநல்லூரில் பாஜகவினர் தனியார் சுவற்றில் விளம்பரம் செய்திருந்தனர். பிறந்தநாள் விழா முடிந்ததும் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துவிட்டு, அதில் விளம்பரம் எழுதினர்.

திமுக விளம்பரத்தை பாஜகவினர் அழிக்க முயன்றனர். தகவல்அறிந்து திமுகவினர் குவிந்ததால் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த திமுகவைச் சேர்ந்தநடராஜன், அங்கிருந்த பாஜகவினர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேருக்கு காயம்ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, நடராஜன் தாக்கி விரட்டப்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த போலீஸார் நடராஜனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இத்தகவல் பரவி, 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரும், 100-க்கும்மேற்பட்ட திமுகவினரும் அங்கு குவிந்தனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பிலும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில், திமுகவினர் கலைந்து சென்றனர்.

பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டதால், 35 பேர்கைது செய்யப்பட்டு மாலையில்விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே, நடராஜனை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT