தமிழகம்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 25 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து சென்னை வந்தது

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 25 ஆயிரம் எண்ணிக்கையிலான ரெம்டெசிவிர் மருந்து சென்னை வந்தது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் போன்ற விலை உயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விலை உயர்ந்த மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த மாதம் 2 லட்சம் எண்ணிக்கை ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆர்டர் செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக 25 ஆயிரம்மருந்துகள் சென்னைக்கு நேற்றுவந்தன. மருந்துகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் 5.40 லட்சம்பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4.86 லட்சம்பேர் வைரஸ் தொற்றில் இருந்துகுணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக குணமடைபவர்களின் விகிதம் தமிழகத்தில்தான் அதிகம். வைரஸ் தொற்றால்பாதிக்கப்படும் 80 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில்சிகிச்சை பெறுகின்றனர். விலைஉயர்ந்த மருந்துகளைக் கொண்டுசிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்களிடம் 2 லட்சம்எண்ணிக்கையில் ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, 25 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளன. 1.75 ஆயிரம் மருந்துகள் அடுத்த மாத இறுதிக்குள் வந்துவிடும்” என்றனர்.

SCROLL FOR NEXT