தமிழகம்

36 மணி நேரம் நடந்த ‘ஆபரேஷன் ஆம்லா’: கடலோர பாதுகாப்பு ஒத்திகையின்போது தமிழகம் முழுவதும் 100 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘ஆபரேசன் ஆம்லா’ என்ற பெயரில் நடந்த 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நேற்றிரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. கடலோரப் பகுதிகளில் மாறுவேடத்தில் ஊடுருவ முயன்ற 100-க்கும் மேற்பட்டோர் போலீஸாரிடம் பிடிபட்டனர்.

இந்திய கடலோரப் பகுதி களில் தீவிரவாதிகள் ஊடுரு வலைத் தடுக்கும்விதமாக ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகையின்போது இந்திய கடலோரப் படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட அதிரடிப் படை வீரர்கள் சிலர் போலி வெடிகுண்டு, துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள்போல கடலோரங் களில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சிப் பர். அவர்களை கடலோர மாவட் டங்களில் உள்ள போலீஸாரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும், மீனவர்கள் மற்றும் மற்ற துறை பணியாளர்களின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்க வேண்டும்.

13 கடலோர மாவட்டங்களில்..

கடலோரப் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்கிறோமா என்பதை சரி பார்த்துக்கொள்ள இந்த ஒத்திகை உதவுகிறது. 1,076 கி.மீ. தொலைவு கொண்ட, 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடலோரங்களில் ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற 36 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது.

தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும ஏடிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையின்போது தீவிரவாதி களைப்போல ஊடுருவ முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். நேற்று முன்தினம் 12 இடங்களில் ஊடுருவ முயன்ற 57 பேர் பிடிபட்டனர்.

சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்த ஒத்திகையின்போது, சரக்கு கப்பலுக்குள் 12 பேர் புகுந்து கப்பலைக் கடத்த முயற்சித்தனர். அவர்களை கடலோர காவல்படையினரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் எச்சரித்தனர். அது பலனளிக்காத நிலையில், அதிரடிப்படை வீரர்களை கப்பலுக்குள் அனுப்பி ஊடுருவல் காரர்களுடன் சண்டையிட்டு சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதேபோல ராமேசுவரத்தில் 26 பேரும், நாகப்பட்டினத்தில் 24 பேரும் தூத்துக்குடியில் 22 பேரும் ஊடுருவ முயன்று பிடிபட்டனர். கடந்த 36 மணி நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸாரிடம் பிடிபட்டனர்.

விரைவில் அறிக்கை

ஒத்திகையின்போது எங்கெல் லாம் பாதுகாப்பு குறைபாடு இருந் தது என்ற தகவலை கடலோர காவல்படையினர் தமிழக போலீ ஸாருக்கு இன்னும் சில தினங் களில் அறிக்கையாக அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது. அதனடிப் படையில், குறிப்பிட்ட இடங்களில் கடலோர பாது காப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT