அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமி நாத சுவாமி கோயில் கும்பாபி ஷேகம் நேற்று அதிகாலை நடை பெற்றது.
தண்டூன்றி, தண்டபாணி நிலையில், தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்து ஞான குருவாக நின்ற கோலத்தில் உள்ள மூலவரான முருகன், சுவாமிக்கே நாதன் ஆனதால் இங்கு சுவாமிநாதனாகப் போற்றப் படுகிறார்.
கட்டுமலைக் கோயிலான இதில் 60 தமிழ் வருட தேவதைகளும், 60 படிக்கட்டுகளாக இருந்து முரு கனை வழிபட வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.
இக்கோயிலில் கடந்த 3 ஆண்டு களாக நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, செப் டம்பர் 6-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, நேற்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹுதி, அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர் விமானம், சுவாமி, அம்மன் விமானம் மற்றும் பரிவார தெய்வ விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.