தமிழகம்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது யார்? - அமைச்சர்களுடன் திமுக வாக்குவாதம்

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியது யார் என்பது தொடர்பாக அமைச்சர்களுடன் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் நேற்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக):

கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற் றப்பட்டன.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1986-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிவிக் கப்பட்டது. 1991, 2011 அதிமுக ஆட்சியில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்தில் 18 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட் டன. அதிமுக ஆட்சியில் ரூ.1928.80 கோடியில் இந்தத் திட்டம் முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக் கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் (திமுக):

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது என லாவணி பாட விரும்பவில்லை. அதிமுக ஆட்சியில்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார். அதனை அவர் நிரூபிக்கத் தயாரா? திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அமைச்சர் பி.பழனியப்பன்:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் முடிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நீதிமன்ற வழக்குகள், வனத்துறை அனுமதி போன்ற காரணங் களால் குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடிநீர் வழங்கப் படும் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT