அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த திருமழபாடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, இப்பகுதியில் குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனர். ஆனால், போதிய அளவு சாக்குகள் இல்லாததால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல்மணிகளை, கொள் முதல் நிலையத்தின் அருகில் சாலை நெடுகிலும் கொட்டி வைத்துள்ளனர்.
மேலும், தற்போது அவ்வப் போது மழை பெய்து வருவதால் சாலையில் கிடக்கும் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து விட வாய்ப்புள்ளது. மேலும், சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
எனவே, நெல்லை கொள்முதல் செய்ய போதுமான சாக்குகளை நெல்முதல் நிலையங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர் கள் அனுப்பிவைக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்வதில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.