ரயில்வேயை தனியார்மயமாக் கும் மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார் பில் மின்விளக்கு அணைக்கும் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னையில் ரயில்வே குடியிருப்புகள், கோவை, சேலம், திருச்சி உள் ளிட்ட இடங்களில் ரயில் பயணி கள், ஊழியர்கள், பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 8 முதல் 8.10 மணி வரை 10 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக எஸ்ஆர் எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
ரயில்வே துறையில் தனியார்மயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி உட் பட 109 முக்கிய வழித்தடங் களில் 151 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தமிழகத் தில் இருந்து சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதனால், ரயில் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.
தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் களில் மூத்த குடிமக்கள், மாற் றுத் திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை இல்லை. தனியார் நிறு வனங்கள் மூலம் ஓட்ட திட்ட மிட்டுள்ள சொகுசு ரயில்களை ரயில்வே மூலமே ஓட்டினால், ரயில்வேக்கு வருமானம் கிடைக்கும். எனவே, தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்றார்.