சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு, `டயல் ஃபார் வாட்டர் 2.ஓ' என்ற திட்டத்துக்காக வழங்கப்பட்ட `ஸ்கோச் தங்க விருது', கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்துக்காக வழங்கப்பட்ட `தேசிய நீர் புதுமை விருது' ஆகிய விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் பழனிசாமியிடம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலாளர் க.சண்முகம், துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 
தமிழகம்

மத்திய அரசின் விருதுகளை பெற்ற உள்ளாட்சி மன்ற தலைவர்கள் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசிடம் இருந்து விருது களை பெற்ற பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 2018-19-ம் ஆண்டுக்கான மின் ஆளுமை விருது மற்றும் பாராட்டுச் சான்றி தழை முதல்வர் பழனிசாமியிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறை களை திறம்பட செயல்படுத்திய தற்காக தேசிய அளவில் தமிழகம் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப் பட்டு, மத்திய ஊராட்சி அமைச் சகத்தால் 2018-19-ம் ஆண்டுக்கான மின் ஆளுமை விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட் டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து, மத்திய அரசின் விருதை காண் பித்து வாழ்த்து பெற்றார்.

அதேபோல, ஊராட்சி அமைப்பு களின் சிறந்த முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஊராட்சி அமைச்ச கத்தால் வழங்கப்பட்ட தீன்தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலி மைப்படுத்தும் விருதை பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சி, திரு மங்கலம் மற்றும் கொங்கணாபுரம் வட்டார ஊராட்சிகள், ஆண்டாங் கோவில் கிழக்கு, குருமந்தூர், அம்புகோவில், நெடுங்கல், இக் கரை பொழுவாம்பட்டி, மேவளூர் குப்பம் கிராம ஊராட்சிகள், நானாஜி தேஷ்முக் ராஷ்ட்ரிய கவுரவ கிராம சபை தேசிய விருது பெற்ற களவனூர் கிராம ஊராட்சி, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது பெற்ற டி.சி.கண்டிகை கிராம ஊராட்சி, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது பெற்ற அனுமந்தபுரம் கிராம ஊராட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தனி அலுவலர் களும் முதல்வரை சந்தித்து தாங்கள் பெற்ற விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT