தமிழகம்

ராமேசுவரத்தில் மீன் இறங்குதளம் உட்பட ரூ.102 கோடியில் கால்நடை பல்கலை. மீன்வளத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

ராமேசுவரத்தில் மீன் இறங்கு தளம் உட்பட மொத்தம் ரூ.102 கோடியே 63 லட்சத்தில் கட்டப் பட்டுள்ள மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்துக்கான கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மீன்வளத் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டம், குந்துகால் கிராமத்தில் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம், சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.10 கோடியே 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம், மீன் விற்பனைக்கூடம் உட்பட மொத்தம் ரூ.102 கோடியே 63 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கான கட்டி டங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை கெல்லீஸில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ரூ.4 கோடியே 40 லட்சத்தில் தங்கும் அறைகள், தொழிற்பயிற்சிக் கூடம், பணியாளர் அறை, சமையலறை யுடன் கூடிய உணவருந்தும் கூடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளு டன் கட்டப்பட்டுள்ள சிறுமியர் களுக்கான அரசினர் கூர்நோக்கு இல்லக் கட்டிடத்தை முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்த படி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

பணி நியமன ஆணை

மேலும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் 2019-2020-க்கான 92 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணிநியமன ஆணைகளை வழங் கும் அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல் வர் வழங்கினார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT