நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள். 
தமிழகம்

நாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால் விஷம் கலந்தனரா?

செய்திப்பிரிவு

நாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் மீன்கள் இறந்து மிதந் ததையடுத்து, குளத்து நீரில் விஷம் கலந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாத சுவாமி கோயில் உள் ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோயிலில் ராகு பெயர்ச்சி, சிவராத்திரி, பிரதோஷம் ஆகி யவை சிறப்பாக நடைபெறும்.

இந்த கோயிலுக்குச் சொந்த மான குளம் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுப்பவர்கள் குளத்தில் வளரும் மீன்களைப் பிடித்து விற்பனை செய்வார்கள். கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு குளம் ஏலம் விடப்படவில்லை.

கோயில் நிர்வாகம் சார்பில் குளம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன் குளம் ஏலம் விடப்படு வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் குறைவான தொகைக்கு ஏலம் போனதால், அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குளிப்பதற்காக நேற்று குளத்துக்கு சென்ற அப்பகுதி மக்கள், குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் குளத்து நீரை அள்ளி முகர்ந்து பார்த்தபோது, பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது போன்ற வாடை அடித்துள்ளது. மேலும், குளத்து நீர் ஆங்காங்கே நிறம் மாறி இருந்தது.

உடனே, இதுகுறித்து நாகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து அங்கு வந்த போலீஸார் குளத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கோயில் குளத்தின் ஏலத்தை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த நபர்கள் குளத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT