தமிழகம்

முதலீட்டாளர் மாநாடு: தொழில்துறையினர் புகழாரம் - குறுகிய காலத்தில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு என பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னையில் உலக முதலீட்டாளர் கள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது.

நிறைவு விழாவிற்கு மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மற்றும் விருந்தி னர்களை தமிழக அரசின் தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வர வேற்றார்.

தொடர்ந்து, அப்போலோ மருத் துவமனைகளின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் போர்டு நிறுவனம் கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க சென்னை, புனே மற்றும் பெங்களூருவை பரிசீலித்து, இறுதியில் சென்னை யில் கார் உற்பத்தி ஆலையை நிறுவியது. அதுகுறித்து கேட்ட போது, சென்னையில் சுகாதார திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் படுவதால்தான் தேர்வு செய்தோம் என்று தெரிவித்தனர்.

அன்று 150 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட அப்போலோ இன்று 10 ஆயிரம் படுக்கை வசதி களுடன் விரிவாக்கப் பட்டுள்ளது. இன்று உலகளவில் மருத்துவ சேவை மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உடல் உறுப்புகள் தானத்தை பொருத்தவரை தமிழ கம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஒரே நாளில் 23 உறுப்புகள் தானம் செய்யப்பட்டு உலகளவில் சாதனை செய்ய பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தந்த ஊக்கம்தான் காரணம்.

டெலி மெடிசின் மையங்கள் உலகளவில் ஊக்குவிக்கப்படு கின்றன. இமாச்சல பிரதேசத்தில் மிகவும் சிக்கலான யாரும் போக முடியாத 25 பகுதிகளில் டெலிமெடி சின் மையங்கள் பயன்பாட்டில் உள்ளது.

நாடு முழுவதும் 60 ஆயிரம் குக்கிராமங்களில் டெலிமெடிசின் திட்டத்தை விரிவுபடுத்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடந்த வாரம் ஒப்புதல் அளித் துள்ளது என்றும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணன் பேசுகையில்,‘‘ ஜெர்மனியின் நுணுக்கமும் பிரான்சின் கலைநயமும் இந்திய பாரம்பரியமும் ஒன்று சேர்ந்து இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதிபலித்தது என்றார். 2008-09 ம் ஆண்டுகளில் நிலவிய மின் பற்றாக்குறையால், தொழில் நிறுவனங்களுக்கு மோச மான சூழல் ஏற்பட்டது. பல நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு போக லாமா என்றும் நினைத்தன. ஆனால், முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், மிக குறுகிய காலத்தில் மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டார்.

அவர் கையில் ஏதும் மந்திர சக்தி உள்ளதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மிகச் சிக்கலான விஷயத்திலும் சில நிமிடங்களில் முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவர் முதல்வர். 30 நாளில் தொழில் திட்டங்களுக்கு அனுமதி என்ற உத்தரவால், தென் மாவட்டங்களுக்கு நிறைய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்துக்கு பின் பெரிய முதலீடுகள் தென் மாவட்டங்களுக்கு கிடைக்க வில்லை. அதை நிவர்த்தி செய்யும் முயற்சியை இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய-அமெரிக்க வர்த்தகக் கவுன்சிலின் துணைத்தலைவர் டயானா பாரல் பேசும்போது,‘‘ இந்த 48 மணி நேரமும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக அதிக பலன் கிடைத்துள்ளது. எங்கள் நாட்டு கருத்தரங்கில் 10 அமெரிக்க நிறுவனங்களுடன் பேசிய போது, மாநிலத்தில் முதலீட்டிற்கான சாதகமான சூழல் அமைந்துள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்தின் விருந்தோம்பல் மிகுந்த மன நிறைவை எங்களுக்கு அளித்தது’’ என்றார்.

மலேசியாவின் திமா லங்கத் நிறு வன தலைவர் டான் செறி டத்தோ ஹரிநாராயணன் பேசியதாவது;

தமிழகத்தில் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றது மறக்கமுடியாத நிகழ் வாகும். இந்த மாநாடு தமிழகத்தின் புதிய அளவீடாகும். எங்கள் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திரவ இயற்கை எரிவாயு, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளது. தமிழகத்தில், திரவ இயற்கை எரிவாயு திட்டத்தில் முதலீடு செய்துள்ளோம்.

தமிழகம் முதலீட்டாளர்களுக்கு சாதகமான மாநிலமாக செயல் பட்டு வருகிறது. தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம்-2023ன் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. இதற்கு எரிசக்தித்துறை மிகுந்த தூண்டு கோலாக உள்ளது என்றார். தொடர்ந்து, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்க மணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,‘‘ முதல்வர் ஜெய லலிதாவின் தலைமையில் தமிழகம் இந்தியாவி்ன் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தின் அதிர்வலை அருகில் உள்ள மாநி லங்களையும் தாக்கியுள்ளது.இங்குள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் திகைத்துப் போயுள்ளன.’’ என்றார்.

நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளின் தூதர்கள்,நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தமிழக அரசு அதிகாரிகள், தொழில திபர்கள், வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT