மதுரையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என தமிழ் இணைய கல்விக் கழக இயக்குநர் த.உதயச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை தமுக்கம் மை தானத்தில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட த.உதயச்சந்திரன் பேசியது:
மதுரையில் புத்தக திருவிழா ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி நடக்கிறது என யோசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். தற்போது நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். பண்பாட்டுத் திருவி ழாவாக பரிணமிப்பதற்கு அனை வரும் முயற்சிக்க வேண்டும். எப்போதும் அரசு அதிகாரிகள் எழுத்தாளர்களுக்கு உறுது ணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம்.
புத்தக திருவிழா என்பது புதிதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அல்ல. 2,000 ஆண்டு களாக நடைபெற்று வரும் தொடர்ச்சிதான் மதுரையில் தற்போது நடைபெற்று வரும் புத்தக திருவிழா. தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு மேலானது என்பதை கீழடியில் நடந்துவரும் ஆய்வுகள் தெளிவுபடுத்தி வருகின்றன. அங்கு கிடைத்துள்ள பண்டைய கால மக்கள் பயன்படு த்திய மண்பாண்டங்கள், செங்கல், உறைகிணறுகள் போன்ற பொருட்கள் தமிழர்கள் எழுத்தறிவோடும், செல்வ செழிப் போடும் வாழ்ந்து வந்தனர் என் பதை நமக்கு உணர்த் துகின்றன.
எனவே, அனைவரும் கீழடிக்கு சென்று அங்கே நடைபெறும் ஆய்வை கட்டாயம் பார்த்து வர வேண்டும். மூத்த தமிழறிஞர்கள் பலரும் எதிர்காலத்தில் தமிழ் எப்படி இருக்குமோ என்ற ஐயத்தில் உள்ளனர். எதிர்கால தலைமுறையினரிடம் தமிழ் பாதுகாப்பாக இருக்கும் என்பது என் நம்பிக்கை என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: 1960-ம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நடுத்தர வர்க்கம் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டது. தற்போதைய நடுத்தர வர்க்கம் சுயநலத்தோடு செயல்படுகிறது. புத்தகங்களை கவுரவத்துக்காக வாங்காமல் வாசிப்பதற்காகவே வாங்க வேண்டும் என்றார்.