தமிழகம்

தருமபுரியில் குழந்தைகள் விற்பனை: தாய், புரோக்கர் உள்பட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

தருமபுரியில் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர் பாக ஒகேனக்கல் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை நாகர்கோவிலைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜா. இவரது மனைவி ராமி (33). இவர்களுக்கு அடுத்தடுத்து 4 ஆண் மற்றும் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் இரண்டு குழந்தைகள் உடல்நிலை பாதிப்பால் இறந்துள்ளன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்கு ராமி விற்றதாக கூத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதனுக்கு தகவல் வந்தது. அவர் ஒகேனக்கல் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல் ஆய்வா ளர் ஜெய்சல்குமார் தலைமையி லான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பென்னா கரம் அடுத்த தின்னபெல்லூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (42) என்பவர் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத காரணத்தால் ராமியிடம் பணம் கொடுத்து குழந்தையை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளிக் கிழமை இரவு ராமி, மாதேஷ், புரோக்கராக செயல்பட்ட துரை ராஜ் ஆகியோரை ஒகேனக்கல் காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமியிடம் விசாரணை மேற் கொண்டதில், தங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தையை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு 20 ஆயிரம் ரூபாய்கு விற்பனை செய்ததாகக் கூறியுள்ளார். இதற்கு செல்வராஜ் என்பவர் புரோக்கராக செயல்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று சரவணன், செல்வராஜ் இருவரையும் ஒகேனக்கல் காவல் துறையினர் கைது செய்தனர். விற்பனை செய்த 3 வயது பெண் குழந்தை மற்றும் 4 மாத ஆண் குழந்தையை போலீஸார் மீட்டு தொப்பூர் அருகேயுள்ள இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவர் தன் ஆண் குழந்தையை விற்பனை செய்த சம்பவத்தில் அஞ்சலி உட்பட 4 பேரை பென்னாகரம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் குழந்தை விற்பனை சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் சிலர், வறுமையில் உள்ளவர்கள், கண வரைப் பிரிந்த இளம்பெண்கள், தவறான நட்பால் குழந்தை பெற்ற வர்கள் ஆகியோரை அணுகி மூளைச்சலவை செய்து குழந்தை விற்பனையை ஊக்குவித்து வருவ தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதுபோன்ற கும்பலை முழுமையாக ஒடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT