வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதுபோல் உள்ளது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தேகம் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் 25 இடங்களில் போட்டியிடும். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் இயக்கத்தின் தலைமையில் கூட்டணி அமையும் சூழல் உருவாகும்.
திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் கிரானைட் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரி சகாயம் ஈடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது. தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதுபோல் உள்ளது.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.