தமிழகம்

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: அமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:

விவசாய மின் இணைப்பு பெறுவதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் விரும்பினால், விரைவாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தத்கால்) மின் இணைப்புவழங்கல் திட்டம், பேரவையில் அறிவித்தபடி இந்த ஆண்டும்நடைமுறைப்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சம், 7.5 குதிரைத்திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சம் வீதம், ஒருமுறை கட்டணம் செலுத்தும் 25 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள், தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி, வரும் 21-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை உரிய தொகையை செலுத்தி, விண்ணப்பிக்கலாம்.

பொது வரிசை முன்னுரிமையில் கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2004 மார்ச் 31-ம் தேதி வரை பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களில் 1,000 விண்ணப்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் திருத்தப்பட்ட சுயநிதி திட்டத்தின் கீழ்இலவச விவசாய மின் இணைப்புகள் உட்பட 25 ஆயிரம்இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

நடப்பு ஆண்டில் மொத்தம் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT