மேட்டூர் அணை: கோப்புப்படம் 
தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

வி.சீனிவாசன்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மழை குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தில் ஏற்றத்தாழ்வு நீடித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று (செப்.17) 14 ஆயிரத்து 458 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (செப்.18) காலை 13 ஆயிரத்து 1 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு இருந்த நிலையில், இன்று காலை முதல் டெல்டா பாசனத்துக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நீர் திறப்பைக் காட்டிலும், வரத்து குறைவாக இருப்பதால், அணை மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 91.67 அடியாக இருந்தது. இன்று காலை 91.35 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 54.20 டிஎம்சியாக உள்ளது.

SCROLL FOR NEXT