தமிழகம்

மாநில ஹாக்கி போட்டியில் அரியலூர் அரசு பள்ளி அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் அரியலூர் அரசு பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

பாளையங்கோட்டை ஹாக்கி நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பெல்பின்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க செயற்கை புல்வெளி மைதானத்தில் 4 நாட்கள் நடைபெற்றன. இப்போட்டியில் சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. அணியும், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் 4-க்கு 0 என்ற புள்ளிக்கணக்கில் அரியலூர் அரசு பள்ளி அணி வெற்றிபெற்று முதலிடம் பெற்றது.

பரிசளிப்பு விழாவுக்கு பெல்பின்ஸ் நிறுவன தலைவர் குணசிங் செல்லத்துரை தலைமை வகித்தார். நிர்வாக இயக்கநர் சஞ்சய் குணசிங், ஹாக்கி நலச்சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி சரக டிஐஜி முருகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பாளை யங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி முதல்வர் அருள்தேவதாஸ், ஹாக்கி போட்டி ஒருங்கிணைப் பாளர் டோம்னிக் சாவியோ, ஹாக்கி நலச்சங்க தலைவர் எஸ். பெனடிக்ட், நிர்வாக குழு உறுப்பினர் சிவராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT