தொலைத்தொடர்பு சிக்னல் கிடைக்காத பகுதிகளில் மாணவர்களின் வீடு தேடிச் சென்று வகுப்பு நடத்தும் மாற்றுத் திறனாளி ஆசிரியரின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் முலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைக் காததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், சோலையாறு அணை பள்ளியில் உதவி ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்துவரும் சிவசரவணன் (41) என்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர், வால்பாறை எம்ஜிஆர் நகரில் இருந்து தினம் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷேக்கல் முடி, கல்யாணப் பந்தல், சேடல் டேம், சோலை யாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மூன்று சக்கர வாகனத் தில் சென்று, தனது பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு பாடம் நடத்திவருகிறார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடு தேடிச் சென்று கற்பித்து வரும் ஆசிரியரின் சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.