மகாளய அமாவாசையை முன் னிட்டு சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் முன் தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள். (அடுத்த படம்) மலையில் ஏறுவதற்கு முன்பு தாணிப்பாறையில் பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த ஊழியர்கள். படங்கள்: இ.மணிகண்டன் விருதுநகர் - மதுரை எல்லையில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி.
இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி தலா 4 நாட்கள் என மாதத்துக்கு 8 நாட்கள் மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்.15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினமான நேற்று சதுரகிரி செல்ல மலையடிவாரத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்பு மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.