தமிழகம்

மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான இடத்தை காலி செய்யும் உத்தரவு மறுபரிசீலனை: தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத் தில் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை காலி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரை வழக்கறிஞர் கள் சங்கத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை உடனடியாக காலி செய்யுமாறு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தர விட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், செயலாளர் அறிவழகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலை நேற்று சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு ஒதுக் கப்பட்ட இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை வழக்கறிஞர்களின் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.சி.பால்கனகராஜ் கேட்டுக் கொண்டார்.

”மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தங்களது (தலைமை நீதிபதி) வழிகாட்டுதலின்படி நடந்து கொள்வார்கள். அதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த மூத்த வழக் கறிஞர்கள் உங்களை சந்தித்துப் பேச விரும்புகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு, மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வருவதால், மறுநாள் (அக்டோபர் 1-ம் தேதி) அவர்களைச் சந்திக்கிறேன் என்று தலைமை நீதிபதி கூறியதாக ஆர்.சி.பால்கனகராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT