தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு

செய்திப்பிரிவு

அட்டாக் பாண்டி மனைவி தயாளு சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனு:

நில அபகரிப்பு வழக்கில் போலீ ஸார் தேடியதால் அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தார். அந்த நேரத்தில் பொட்டு சுரேஷ் கொலை யில் அவரை குற்றவாளியாக சேர்த் தனர். கணவர் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறும், அவரை கைது செய்தால் என்கவுன்ட் டரில் கொலை செய்வதாகவும் போலீஸார் மிரட்டினர். என் மீதும், குடும்பத்தினர் மீதும் பல வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை மும்பையில் கைது செய்ததாக நேற்று தகவல்கள் வெளியாயின. பொட்டு சுரேஷ் கொலையில் திமுகவின் முக்கிய தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறுமாறு போலீஸார் நெருக்கடி அளிக்கின்றனர்.

அவரை மும்பையில் இருந்து மதுரைக்கு கொண்டு வரும் வழியில் என்கவுன்ட்டர் மூலம் கொல்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அவருக்கு பாதுகாப்பு வழங்கவும், அவரை துன்புறுத்தக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT