ரயில்களுக்கான புதிய கால அட்ட வணை வரும் 29-ம் தேதியன்று வெளியிடப்பட்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத் தப்படவுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘விரைவு ரயில்களில் பல்வேறு மாற் றங்களை கொண்டு ரயில்வே கால அட்டவணை இறுதிகட்ட பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன. சில விரைவு ரயில்களின் வேகம் கூட்டப்பட்டுள்ளது. சில ரயில்கள் காலதாமதமாகவும், சில ரயில்கள் தற்போதுள்ள நேரத்தை காட்டிலும் முன்கூட்டியே செல்லவும் நேரம் மாற் றப்பட்டுள்ளது.
புதிய காலஅட்ட வணை பட்டியல் வரும் 29-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க் கிறோம். அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய கால அட்டவணையை அமல்படுத்துவோம்’’ என்றனர்.