பிரதமர் நரேந்திர மோடி: கோப்புப்படம் 
தமிழகம்

பிரதமர் மோடியின் பிறந்த நாள்: ஆளுநர், முதல்வர், மு.க.ஸ்டாலின், ரஜினி வாழ்த்து

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 17) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்

இந்தியா உங்கள் தொலைநோக்குத் தலைமையின் கீழ் விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. மற்ற நாடுகளுக்கிடையேயான நல்லுறவில் அதன் சரியான இடத்தைப் பிடித்து வருகிறது. தேசத்திற்குச் சேவை செய்வதில் உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் நடைமுறைக்கேற்ற அணுகுமுறையுடன் இந்தியா வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உங்களின் பிறந்த நாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்நாட்டுக்குச் சேவை புரிவதற்காக உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் பலத்தினைக் கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று, நாட்டுக்கான உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்.

ரஜினிகாந்த்

மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற விழைகிறேன். பிறந்த நாள் வாழ்த்தக்கள்.

SCROLL FOR NEXT