கடலூரில் பெண் ஒருவர் தவறவிட்ட கைப்பையை போலீஸார் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர். 
தமிழகம்

காவலர்களின் நேர்மைக்கு டிஎஸ்பி பாராட்டு

செய்திப்பிரிவு

கடலூர் சாவடியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் நேற்று முன்தினம் இரவு அவரது சகோதரருடன் பைக்கில் திருப்பாதிரிப்புலியூர் சென்றார். அவரது கைப்பையை தவற விட்டார். இதுகுறித்து அவர் கடலூர் புதுநகர் போலீஸில் புகார் செய்தார்.

இந்நிலையில், கடலூர் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், பெண் காவலர் லதா ஆகியோர் கடற்கரை சாலையில் கைப்பை ஒன்று கிடப்பதை பார்த்தனர். அதில், ரூ.19 ஆயிரத்து 800 மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் இருந்தன. இதனை கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார், சுகந்தியிடம் போனில் பேசியதில், அவரது கைப்பை என தெரியவந்தது. நேற்று அவரிடம் கைப்பையை போலீஸார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், காவலர் லதா ஆகியோருக்கு டிஎஸ்பி சாந்தி பாராட்டு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT