தமிழகம்

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்ணன் மகன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் (தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் - அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர்) கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கோபி ஆர்.துரைசாமி ஆகியோருடன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திமுகவில் இணைந்தார்.

அப்போது, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு,ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், கோபி நகரச் செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT