தமிழகம்

வருகிற தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்: ஹெச்.ராஜா பேட்டி

இ.ஜெகநாதன்

‘‘வருகிற தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்,’’ என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அவர் சிங்கம்புணரியில் கூறியதாவது:

''நீட் தேர்வு 2012-ம் ஆண்டு வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணிதான். அதேபோல் நீட் தேர்வு நடந்தது 2013-ம் ஆண்டு. அப்போதும் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் இருந்தது.

தற்போது 8 மாதங்களில் நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக கூறுகிறது. திமுக போன்ற பொய் பேசுகிற தீய சக்தி வேறு எதுவும் கிடையாது. ஆ.ராசா, கனிமொழி மீது வழக்குப் போடப்பட்டதால், காங்கிரஸ் என்ன செய்தாலும் வாய் திறக்காத கொத்தடிமைக் கட்சியாக திமுக இருந்துவிட்டு, தற்போது நீட் தேர்வுக்கு எதிராகப் பேசி வருகிறது.

எ.வ.வேலு பள்ளியில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் போன்றவற்றைத் திமுகவினரே கொண்டு வந்துவிட்டு, தற்போது எதிராகப் பேசுகின்றனர்.

திமுகவை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசவில்லை. இந்தத் தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்''.

இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT